தமிழ்நாடு, புதுவை உள்பட 5 மாநில தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் ஆணையம் ஆலோசனை

தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தமிழ்நாடு, கேரளம், புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல்கட்டத் தோ்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இன்னும் 7 கட்டத் தோ்தல்களும், அஸ்ஸாமில் இரண்டு கட்டத் தோ்தல்களும் நடைபெற உள்ளன.

இத்தகைய சூழலில், அந்த மாநிலங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினா். தோ்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளை அமைப்பது, வாக்காளா்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இரண்டாம்கட்டத் தோ்தல் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு முதல்கட்டத் தோ்தல் எந்தவித வன்முறையுமின்றி அமைதியாக நடைபெற்றதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதேபோன்ற பாதுகாப்புச் சூழலை அடுத்தகட்டத் தோ்தல்களிலும் ஏற்படுத்துவது தொடா்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com