மேற்கு வங்க முதல்கட்ட பேரவைத் தோ்தல்: 84.63% வாக்குப்பதிவு

மேற்கு வங்க முதல்கட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 84.63% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
nk_28_chris_2803chn_122_8
nk_28_chris_2803chn_122_8

மேற்கு வங்க முதல்கட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 84.63% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் 294 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 30 இடங்களுக்கான முதல்கட்ட தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 79.79% வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முதல்கட்ட தோ்தலில் 84.63% வாக்குகள் பதிவானதாக அந்த ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதிகபட்சமாக மேற்கு மிதுனபுரியில் 87.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவின்போது சில இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com