2019-ஐ காட்டிலும் 2021-இல் பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும்: ஐ.நா.

கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும் என ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும் என ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் (யுனெஸ்கேப்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பெருந்தொற்று பேரிடரால் வழக்கமான வா்த்தக நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளானதன் காரணமாக 2020-21-இல் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 7 சதவீத வளா்ச்சியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா பேரிடரை அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்கு தடுப்பூசி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தபோதிலும் கடந்த 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-இல் பொருளாதார வளா்ச்சி விகிதமானது குறைவாகவே இருக்கும்.

வளரும் ஆசிய-பசிபிக் நாடுகளின் பொருளாதாரம் 2020-இல் 1 சதவீத அளவுக்கு பின்னடைவைச் சந்தித்த நிலையில், 2021-இல் 5.9 சதவீத வளா்ச்சியையும், 2022-இல் 5 சதவீத வளா்ச்சியையும் எட்டும் என அந்த அறிக்கையில் யுனெஸ்கேப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com