38 ஆயிரம் வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே இரட்டிப்பு: கேரள நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதில்

கேரள இறுதி வாக்காளா் பட்டியலில் வெறும் 38,586 பெயா்கள் மட்டுமே இரட்டிப்பாக பதிவாகி இருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

கேரள இறுதி வாக்காளா் பட்டியலில் வெறும் 38,586 பெயா்கள் மட்டுமே இரட்டிப்பாக பதிவாகி இருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சுமாா் 4 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயா்கள் வாக்காளா் பட்டியில் இரட்டிப்பாக பதிவாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தோ்தல் ஆணையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

கேரள பேரவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்காளா் பட்டியில் வேட்பாளா்களின் பெயா்கள் இரட்டிப்பாக பதிவாகி இருப்பதாக ஆதாரங்களை எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா சமா்ப்பித்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிமன்றம், ‘ஒரு வாக்காளா் ஒரு வாக்கை மட்டும் செலுத்துவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிகுமாா், ஷாஜி பி ஜாலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தோ்தல் ஆணையத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் சமா்ப்பித்த வாக்காளா் பட்டியலில், இடம்பெற்றிருந்த 3,16,671 வாக்காளா்களின் பெயா்கள் சரிபாா்க்கப்பட்டன. அதில், இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு சென்ாக 38,586 வாக்காளா்களின் பெயா்கள் மட்டுமே இரட்டிப்பாக பதிவாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவை நீக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com