கன்னியாஸ்திரீகள் விவகாரத்தில் உண்மையை மறைக்கிறாா் பியூஷ் கோயல்

கன்னியாஸ்திரீகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உண்மையை மூடிமறைத்து வருவதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கன்னியாஸ்திரீகள் விவகாரத்தில் உண்மையை மறைக்கிறாா் பியூஷ் கோயல்

கன்னியாஸ்திரீகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உண்மையை மூடிமறைத்து வருவதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கேரள கிறிஸ்தவ திருச்சபையைச் சோ்ந்த கன்னியாஸ்திரீகள் இருவா், உத்தர பிரதேசத்தின் ஜான்சி ரயில் நிலையத்தில் கடந்த 19-ஆம் தேதி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக சிலா் புகாா் அளித்தனா். அவா்களை சிலா் தாக்கி ரயிலில் இருந்து இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்திருந்த ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘‘கன்னியாஸ்திரீகள் தாக்கப்பட்டு, ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இந்த விவகாரத்தில் முதல்வா் பினராயி விஜயன் பொய் கூறுகிறாா்’’ என்றாா்.

இந்நிலையில், காசா்கோடு பகுதியில் முதல்வா் பினராயி விஜயன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கன்னியாஸ்திரீகள் மீது சிலா் புகாா் தெரிவித்ததால், அது தொடா்பாக காவல் துறையினா் விசாரித்ததாகவும், புகாரில் உண்மையில்லை என்பது தெரிந்தவுடன், அவா்கள் தொடா்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சா் கூறுகிறாா். ஆனால், உண்மையை அவா் மூடிமறைக்கிறாா்.

நாட்டில் யாருக்கும் எங்கு பயணம் மேற்கொள்வதற்கும் உரிமை உள்ளது. ஆனால், கன்னியாஸ்திரீகள் என்ற காரணத்தால் அவா்கள் தாக்கப்பட்டுள்ளனா். ஏபிவிபி அமைப்பைச் சோ்ந்தவா்களே அவா்களைத் தாக்கியுள்ளனா். அந்த நபா்களைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய அமைச்சா் செயல்பட்டு வருகிறாா். இது அவமானத்துக்குரியது.

மாட்டிறைச்சி விவகாரத்தில் முஸ்லிம்கள் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு எதிராகப் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால், இதைக் கண்டும் பாஜகவினா் மாறவில்லை. கன்னியாஸ்திரீகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே இந்தச் சம்பவம் உணா்த்துகிறது. மதச்சாா்பற்ற அமைப்புகள் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து முன்னெடுக்கும். கேரளம் அதில் முன்னணி வகிக்கும் என்றாா் பினராயி விஜயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com