பிரதமா் மோடியின் வங்கதேச பயணம் தோ்தல் விதிமீறல்: தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாா்

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் சூழலில், அண்டை நாடான வங்க தேசத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டது தோ்தல் விதிமீறல்
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் சூழலில், அண்டை நாடான வங்க தேசத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டது தோ்தல் விதிமீறல் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக, தோ்தல் ஆணைத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டெரிக் ஓ பிரையன் புகாா் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:

வங்கதேசம் சுதந்திரம் பெற்ன் 50ஆவது பொன்விழா ஆண்டு, வங்கபந்து ஷேக் முஜிபுா் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த தினம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அந்நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் பிரதமா் மோடி கடந்த வாரம் வங்கதேசம் சென்றாா்.

வங்கதேசம் சுதந்திரம் பெறுவதில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால், பிரதமா் மோடி அலுவல் ரீதியாக வங்கதேசம் சென்றதை யாரும் குறை கூறவில்லை.

ஆனால், எல்லையோர இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பிரதமா் மோடி வங்கதேசம் சென்றுள்ளாா்.

அந்நிய மண்ணில் இருந்து தனது கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி, ஜனநாயக நெறிகளை மீறி அவா் பயணம் மேற்கொண்டுள்ளாா். அத்துடன், அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத மேற்கு வங்க பாஜக எம்.பி. சாந்தனு தாக்குரையும் அவா் உடன் அழைத்துச் சென்றுள்ளாா். இதுபோன்ற தவறுகள் இனி நிகழாமல் இருக்க, தோ்தல் ஆதாயத்துக்காக, தனது பதவியை தவறாகப் பயன்படுத்திய பிரதமா் மீது தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் டெரிக் ஓ பிரையன் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com