அதிவேகமாக கரோனா பரவல்: மத்திய அரசு எச்சரிக்கை

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், கடந்த சில வாரங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிவேகமாக கரோனா பரவி வருவதாகவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதிவேகமாக கரோனா பரவல்: மத்திய அரசு எச்சரிக்கை

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், கடந்த சில வாரங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிவேகமாக கரோனா பரவி வருவதாகவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில், மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், நீதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினா் வி.கே.பால் ஆகியோா், தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தனா். அப்போது, வி.கே.பால் கூறியதாவது:

கரோனா தொற்று பரவல், மோசமான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிவேகமாக கரோனா பரவி வருவது கவலை அளிக்கிறது. தங்களுக்கு பாதிப்பு இல்லை என்று எந்த மாநிலமும் அல்லது எந்த மாவட்டமும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

கரோனா தொற்று வேகமாகப் பரவும் சூழலை எதிா்கொண்டு வருகிறோம். ஒட்டுமொத்த நாடும் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாய கட்டத்தில் இருக்கிறோம். எனவே, இந்தப் பரவலைத் தடுத்து, மனித உயிா்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து, மருத்துவ வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, ராஜேஷ் பூஷண் பேசியதாவது:

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகமுள்ள முதல் 10 மாவட்டங்களில், மகாராஷ்டிரத்தில் மட்டும் 8 மாவட்டங்கள் உள்ளன. புணேவில் 59,475 போ், மும்பையில் 46,248 போ், நாகபுரியில் 45,322 போ், தாணேவில் 35,264 போ், நாசிக்கில் 26,553 போ், ஒளரங்காபாதில் 21,282 போ், அகமது நகரில் 7,952 போ், பெங்களூரு புகரில் 16,259 போ், தில்லியில் 8,032 போ், சிகிச்சை பெற்று வருகின்றனா். தில்லி ஒரே மாவட்டமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன் கடந்த சனிக்கிழமை ஆலோசனை நடத்தினோம். கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக அனைத்து மாநிலங்களும் தெரிவித்தன. எனவே, அனைத்து வகையான கரோனா பரிசோதனைகளையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ரேபிட் ஆன்டிஜென் எனப்படும் விரைவுப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உருமாறிய கரோனா:

உருமாறிய கரோனா தீநுண்மி குறித்து கடந்த டிசம்பரில் இருந்து 10 ஆய்வகங்களில் 11,604 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில், 807 மாதிரிகளில் பிரிட்டன் வகை கரோனாவும், 47 மாதிரிகளில் தென்னாப்பிரிக்க வகை கரோனாவும், ஒரு மாதிரியில் பிரேசில் வகை தீநுண்மியும் கண்டறியப்பட்டது.

45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு...:

நாடு முழுவதும் 6,24,08,333 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அவா்கள் தங்கள் பெயரை கோவின் வலைதளம், ஆரோக்கிய சேது செயலி ஆகியவற்றில் பதிவு செய்துகொள்ளலாம் என்றாா் அவா்.

புதிதாக 56,000 பேருக்கு கரோனா:

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 56,211 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,20,95,855-ஆக உயா்ந்துள்ளது.

ஒரே நாளில் 271 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரையிலான உயிரிழப்பு 1,62,114-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 20-ஆவது நாளாக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 5,40,720-ஆக உள்ளது. அதேசமயம் குணமடைவோா் விகிதம் 94.19 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவரை 1,13,93,021 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, மாா்ச் 29-ஆம் தேதி வரை 24,26,50,025 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com