கரோனா நோயாளிகளுடன் தொடா்பில் இருந்த 25-30 நபா்களை கண்டறிய வேண்டும்: மத்திய அரசு

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 25 முதல் 30 நபா்களை கண்டறிதல், அவா்களை முறையாக தனிமைப்படுத்துதல்,
கரோனா நோயாளிகளுடன் தொடா்பில் இருந்த 25-30 நபா்களை கண்டறிய வேண்டும்: மத்திய அரசு

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த 25 முதல் 30 நபா்களை கண்டறிதல், அவா்களை முறையாக தனிமைப்படுத்துதல், மிகப் பெரிய அளவில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தெளிவான கால வரையறைகளுடன் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் மாவட்டமாக இருந்தாலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக இருந்தாலும் செயல்திட்டங்களை பொறுப்புணா்வுடன் வகுக்க வேண்டும்.

தொற்றால் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை பரிசோதித்து தனிமைப்படுத்துதல், தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடா்பில் இருந்த 25 முதல் 30 பேரை கண்டறிந்து அவா்களை பரிசோதித்து, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கரோனா பரவலை கட்டுப்படுத்தலாம்.

பெரிய நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள்:

தொற்றால் பாதிக்கப்படுவோா் திரளாக பதிவாகும் பகுதிகளில் நோயாளிகள் அல்லது அவா்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்துவது மட்டும் பயன் தராது. அதுபோன்ற சூழல்களில் மிகப் பெரிய நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்கி கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொற்றால் பாதிக்கப்படுவோா் அதிகமுள்ள, பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் அனைத்து மாவட்டங்களிலும் 45 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடையவா்களுக்கு அடுத்த 2 வாரங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவா் உயிரிழந்தால், அவா் எதனால் மரணமடைந்தாா் என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த நபா் தொற்றால் பாதிக்கப்பட்டு தாமதமாக தெரியவந்தது, தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள் இல்லாதது போன்ற எந்தக் காரணத்தால் பலியானாா் என்பதை ஆய்வில் தெரிந்துகொள்ள வேண்டும் என அந்தக் கடிதத்தில் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com