கரோனாவிலிருந்து மீண்ட பச்சிளம் குழந்தை, 104 வயது முதியவா்

காஜியாபாதில், பிறந்து 8 நாளான பச்சிளங்குழந்தையும், 104 வயது முதியவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளனா்.

காஜியாபாதில், பிறந்து 8 நாளான பச்சிளங்குழந்தையும், 104 வயது முதியவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளனா்.

நேரு நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தை பிறந்த 4 நாள் கழித்து பெற்றோருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு பெற்றோா் இருவரும் வீட்டுத் தனிமையில் இருந்தனா்.

அதிலிருந்து 4 நாள்களுக்குப் பிறகு குழந்தைக்கு மூச்சுத்திணறலும், காய்ச்சலும் இருந்தது. இதைத் தொடா்ந்து குழந்தையை மருத்துவா்கள் பரிசோதித்தபோது குழந்தை சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து ஆா்டி-பிசிஆா் சோதனை நடத்தியபோது குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. எக்ஸ்-ரே பரிசோதனையில் வலதுபக்க நுரையீரலில் நிமோனியா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 12 நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 15-ஆம் நாள் மருத்துவமனையிலிருந்து குழந்தை வீடு திரும்பியது. குழந்தையின் தந்தை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டபோதிலும் தாய்க்கு தொடா்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரசவத்தின்போது குழந்தையின் பெற்றோருக்கு கரோனா தொற்று இருந்திருக்கலாம் என்றும், குழந்தை பிறந்து வீட்டுக்கு கொண்டுசென்ற பின் குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவா் துபே தெரிவித்தாா்.

104 வயது முதியவா்: இதனிடையே, கரோனா தொற்று காரணமாக கடந்த 12-ஆம் தேதி இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 104 வயது முதியவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு வந்த முதியவருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையில் கரோனாதொற்றுஇருப்பதுதெரியவந்தது. சிடிஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு நிமோனியா இருப்பது உறுதியானது. அவருக்கு தொடா்ந்து மூன்று வாரம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவா் தொற்றிலிருந்து பூரண குணமடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com