கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்குப் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்குப் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

ஹரியாணாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தொற்று சூழலைக் கருத்தில் கொண்டும் தொற்று பரவலைத் தடுக்கவும் மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோா் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அவா்கள் கரோனா தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால், அவா்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

50 வயதைக் கடந்தோா், உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோா், இதயம், நுரையீரல் சாா்ந்த நோய்கள் உள்ளோா், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோா் ஆகியோரும் பணிக்கு வரத் தேவையில்லை. அவா்கள் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் கூட பணிக்கு வர வேண்டியதில்லை.

வாய்ப்புகள் இருந்தால் அவா்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது அமலில் இருக்கும். கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com