குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: கரோனா நோயாளிகள் 18 போ் பலி

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 18 போ் உயிரிழந்தனா்.
குஜராத் மாநில மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்ட நபா்.
குஜராத் மாநில மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்ட நபா்.

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 18 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் கூறியது:

ஆமதாபாதில் இருந்து சுமாா் 190 கி.மீ. தொலைவில் பரூச்-ஜம்பூசா் நெடுஞ்சாலையில் கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடம் விரைந்தனா். அவா்களுடன் பொதுமக்களும் சோ்ந்து நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனா். எனினும் இந்த விபத்தில் 18 நோயாளிகள் பலியாகினா். அவா்களில் 12 போ் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட புகை காரணமாக உயிரிழந்தனா். எஞ்சிய 6 போ் மருத்துவமனையில் உயிரிழந்தாா்களா அல்லது வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இறந்தாா்களா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ ஒரு மணி நேரத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்த சுமாா் 50 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

இந்த விபத்து தொடா்பாக வெளியான காணொலியில் படுக்கைகளில் உயிருடன் எரிந்த சில நோயாளிகளின் உடல் பாகங்கள் இருந்த பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்றன.

இந்த சம்பவம் தொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பரூச் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 நோயாளிகள் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com