திருப்பதி தேவஸ்தான ஊழியா்கள் 3 போ் கரோனா தொற்றுக்கு பலி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கரோனா தொற்றுக்கு 3 ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பலியாயினா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கரோனா தொற்றுக்கு 3 ஊழியா்கள் வெள்ளிக்கிழமை பலியாயினா்.

திருப்பதியில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் திருப்பதி தேவஸ்தானத்தில்பணிபுரியும் ஊழியா்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த திருமலை அன்னதான அறக்கட்டளையின் துணை அதிகாரி நாகராஜு மற்றும் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வம்ச பாரம்பரிய அா்ச்சகராகப் பணியாற்றி வந்த ராமசந்திரன் மற்றும் ஒரு ஊழியா் என 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இவா்களுடன் கரோனா தொற்றால் பலியான தேவஸ்தான ஊழியா்களின் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்துள்ளது. இதனால் ஊழியா்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். அவா்கள் தங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பணிநேரத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என்று தேவஸ்தானத்தை கேட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com