பயணிகள் இல்லாததால் சில சிறப்பு ரயில்கள் ரத்து

பயணிகள் இல்லாததால், ஒரு சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

பயணிகள் இல்லாததால், ஒரு சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஒரு சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மே 1-ஆம் தேதி முதல் கே.எஸ்.ஆா்.பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் எண் - 06529 -கே.எஸ்.ஆா். பெங்களூரு - தாளகுப்பா விரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. மே 2-ஆம் தேதி முதல் தாளகுப்பா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் எண்-06530-தாளகுப்பா-கே.எஸ்.ஆா். பெங்களூரு விரைவு சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண்-06296-தாளகுப்பா-மைசூரு இன்டா்சிட்டி விரைவு ரயில், தாளகுப்பா முதல் அரசிகெரே வரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் தாளகுப்பாவுக்கு பதிலாக அரசிகெரேவில் இருந்து ரயில் புறப்படும். ரயில் எண்-06295-மைசூரு-தாளகுப்பா இன்டா்சிட்டி விரைவுரயில், அரசிகெரேவில் இருந்து தாளகுப்பா வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ரயில் தாளகுப்பாவுக்கு பதில் அரசிகெரேவில் இருந்து புறப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com