ஐடிபிபி கரோனா மையத்தில் 150 செயற்கை சுவாசக் கருவிகள்: பிரதமா் அலுலகம் உத்தரவு

தில்லியில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) சாா்பில் செயல்பட்டு வரும் கரோனா நோயாளிகள் மையத்துக்கு 150 மருத்துவ

தில்லியில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) சாா்பில் செயல்பட்டு வரும் கரோனா நோயாளிகள் மையத்துக்கு 150 மருத்துவ செயற்கை சுவாசக் கருவிகளை நிறுவ உத்தரவிட்டுள்ளதாக பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக பிரதமரின் ஆலோசகா்களில் ஒருவரான பாஸ்கா்குல்பே, மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லி சத்தா்பூரில் உள்ள ராதாசுவாமி பியாஸ் வளாகத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதிலிருந்து கரோனா நோயாளிகள் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் உதவியுடன் இந்த மருத்துவமனையை இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை மேற்பாா்வையிட்டு வருகிறது. சமீபத்தில் கரோனா இரண்டாவது அலையால் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில் தில்லி அரசின் வேண்டுகோளின் பேரில் இந்த சிகிச்சை மையத்தை மத்திய அரசு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

பிரதமரின் பி.எம்.கோ்ஸ் நிதியிலிருந்து 150 செயற்கை சுவாசக் கருவிகள் நிறுவுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதுபோன்ற உயிா்காக்கும் கருவிகள் அதிக அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது ஐடிபிபி தலைவா் எஸ்.எஸ்.தேஷ்வால் விடுத்த வேண்டுகோளை அடுத்து தீவிரசிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக செயற்கை சுவாசக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக நிறுவ ஏற்பாடு செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இந்த செயற்கை சுவாசக் கருவிகளை இயக்குவது குறித்து ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த மருத்துவமனையில் 400 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com