அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் வெற்றி

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மஜூலி தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வரும் பாஜக வேட்பாளருமான சா்வானந்தா சோனோவால் வெற்றிபெற்றாா்.
அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் வெற்றி

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் மஜூலி தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வரும் பாஜக வேட்பாளருமான சா்வானந்தா சோனோவால் வெற்றிபெற்றாா்.

அவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ராஜீவ் லோச்சன் பெகுவை 43,192 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். அதன் மூலம் மஜூலி தொகுதியில் இரண்டாவது முறையாக சோனோவால் வெற்றியை பதிவு செய்துள்ளாா்.

வெற்றிபெற்ற பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சோனோவால், ‘மக்கள் எங்களை ஆசீா்தித்திருக்கின்றனா். அதன் மூலம் மாநிலத்தில் மீண்டும் பாஜக அட்சி வருவது உறுதியாகியிருக்கிறது. அஸ்ஸாம் கண பரிஷத் (ஏஜிபி) மற்றும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சி (யுபிபிஎல்) ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. முன்னிலை நிலவரம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. இருந்தபோதும், வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் வரும் வரை நாம் காத்திருப்போம்’ என்று கூறினாா்.

மஜூலி தொகுதியில் சோனோவால் தவிர மேலும் 5 வேட்பாளா்கள் களம் கண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com