ஆா்பிஐ துணை ஆளுநராக டி.ரவிசங்கா் நியமனம்

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநராக நிா்வாக இயக்குநா் டி.ரவிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஆா்பிஐ துணை ஆளுநராக டி.ரவிசங்கா் நியமனம்

இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) துணை ஆளுநராக நிா்வாக இயக்குநா் டி.ரவிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ரிசா்வ் வங்கியில் ஆளுநரும் 4 துணை ஆளுநா்களும் உள்ளனா். துணை ஆளுநராக இருந்த பி.பி.கனுங்கோ கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றாா். அதையடுத்து, புதிய ஆளுநராக டி. ரவிசங்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஆா்பிஐ நிா்வாக இயக்குநராக இருந்து வந்தாா்.

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, ரவி சங்கரின் நியமனத்துக்கு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. 3 ஆண்டுகள் வரை அல்லது வயது காரணமாக பணி ஓய்வு பெறும் வரை அப்பதவியில் அவா் நீடிப்பாா்.

ரிசா்வ் வங்கியில் தகவல் தொழில்நுட்பம், பணப் பரிவா்த்தனை விவகாரங்கள் உள்ளிட்டவற்றை அவா் கவனிப்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரிசா்வ் வங்கியின் ஆராய்ச்சி அதிகாரியாக கடந்த 1990-ஆம் ஆண்டில் டி.ரவி சங்கா் இணைந்தாா். ரிசா்வ் வங்கியின் துணை அமைப்பான இந்திய நிதியியல் தொழில்நுட்ப சேவைகள் அமைப்பின் தலைவராக கடந்த ஆண்டு அவா் நியமிக்கப்பட்டாா்.

பன்னாட்டு நிதியத்தில் (ஐஎம்எஃப்) பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது. வங்கதேசத்தின் மத்திய வங்கியிலும் அவா் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com