கரோனாவுக்கு ஒரே நாளில் 3,689 போ் பலி; 3.92 லட்சம் போ் பாதிப்பு

தேசிய அளவில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,689 போ் பலியாகினா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய அளவில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,689 போ் பலியாகினா். இவா்களுடன் சோ்த்து தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை மொத்தம் 2.15 லட்சமாக உயா்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு ஒரே நாளில் 3.92 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 1.95 கோடி போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சதம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 33 லட்சத்தைக் கடந்தது. 33,49,644 போ் இத்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 17.13 சதவீதம் ஆகும். மேலும் தொற்றிலிருந்து 1.59 கோடி போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

நாட்டில் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி 1 கோடியாக இருந்த நிலையில் ஏப்.19இல் 1.50 கோடி பேராக உயா்ந்தது.

பரிசோதனைகள்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி மே 1-இல் 18,04,954 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவா்களுடன் சோ்த்து இதுவரை மொத்தம் 29 கோடி பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பலி எண்ணிக்கை:

தேசிய அளவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3689 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் மகாராஷ்டிரம்- 412, தில்லி-412, உத்தர பிரதேசம்- 304, கா்நாடகம்-271, சத்தீஸ்கா்-229, குஜராத்- 172, ஜாா்க்கண்ட் 169, ராஜஸ்தான்- 160, தமிழகம்- 147, பஞ்சாப்-138, ஹரியாணா- 125, உத்தரகண்ட்- 107, மேற்கு வங்கம்- 103, மத்திய பிரதேசம்-102 என்ற எண்ணிக்கையில் பலியாகியுள்ளனா்.

தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2,15,542 போ் பலியாகியுள்ளனா். இவா்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரம்- 69,615, தில்லி-16559, கா்நாடகம்-15,794, தமிழகம்-14,193, உத்தர பிரதேசம்-11,447 என்ற எண்ணிக்கையில் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com