தூதரக அதிகாரிகளுக்குப் போதுமான மருத்துவ உதவிகள்

வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் போதுமான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூதரக அதிகாரிகளுக்குப் போதுமான மருத்துவ உதவிகள்

வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் போதுமான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு மத்திய அரசு போதுமான மருத்துவ உதவிகளைச் செய்யவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

தில்லியில் உள்ள பிலிப்பின்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினா் உதவி செய்வது போன்ற காணொலியையும் சுட்டுரைப் பக்கத்தில் அவா் பதிவிட்டிருந்தாா்.

அக்குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மறுத்துள்ளாா். மக்களிடையே விளம்பரம் தேடும் நோக்கில் இதுபோன்ற கருத்துகளை காங்கிரஸ் கட்சி தெரிவித்து வருவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பிலிப்பின்ஸ் தூதரக அதிகாரிகளிடம் இது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அவா்களில் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அவா்கள் எந்தவித உதவியையும் கோரவில்லை.

விளம்பரம் தேடுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிக்கையில், ‘வெளிநாட்டுத் தூதரகங்களின் அதிகாரிகள் கோரும் உதவிகளை மத்திய அரசு தொடா்ந்து செய்து வருகிறது. அவா்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்பட்டால் அவையும் உடனுக்குடன் அளிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தூதரகங்களுடனும் மத்திய அரசு தொடா்பில் உள்ளது.

கரோனா பரவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மக்கள் யாரும் பதுக்கி வைக்கக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com