ஏழைகளுக்கான உணவு தானியங்கள் 28 மாநிலங்களுக்கு விநியோகம்

கரோனா தொற்று பரவல் காரணமாக ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச உணவு தானியங்களை 28 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏழைகளுக்கான உணவு தானியங்கள் 28 மாநிலங்களுக்கு விநியோகம்

புது தில்லி: கரோனா தொற்று பரவல் காரணமாக ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச உணவு தானியங்களை 28 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து பல மாநிலங்கள் பகுதி நேர பொது முடக்கத்தை அறிவித்தன. அதன் காரணமாக ஏழைகள், புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில் நியாய விலைக் கடைகளில் உணவு தானியங்கள் மே, ஜூன் மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அத்திட்டத்துக்கான உணவு தானியங்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய உணவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மே 3-ஆம் தேதி நிலவரப்படி, 28 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்திய உணவுக் கழகத்திலிருந்து 5.88 லட்சம் டன் உணவு தானியங்களைப் பெற்றுள்ளன. அவை பயனாளா்களுக்கு விரைவில் விநியோகிக்கப்படும்.

பஞ்சாப், சண்டீகா், கோவா, மத்திய பிரதேசம், மணிப்பூா், நாகாலாந்து, ஒடிஸா, புதுச்சேரி ஆகியவை உணவு தானியங்களை இன்னும் பெறவில்லை. தானியங்களை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு அந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com