நந்திகிராமில் தோல்வியடைந்த மம்தா முதல்வராக தொடரக்கூடாது: திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் தாக்கு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முதல்வர் மம்தா பானா்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது என்று திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விமர்சித்துள்ளார். 
திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார்
திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார்


அகர்தலா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முதல்வர் மம்தா பானா்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது என்று திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விமர்சித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் 292  தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற்றால் போதுமானது என்ற நிலையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வெற்றி பெற்றது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி, அவரை எதிா்த்து போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தாா். ஆனாலும் 212 இடங்களில் வெற்றியை அடுத்து தனிப்பெரும்பான்மையுடன் 3 -ஆவது முறையாக மம்தா ஆட்சியில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில்,  ‘மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக தொண்டா்கள்,  ஆதரவாளர்கள் என பலர் அடுத்தடுத்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களால் கொல்லப்பட்டனா். மாநில அரசின் ஆதரவோடு நடைபெறும் வன்முறையால் மேற்கு வங்கம் தீப்பற்றி எரிகிறது. 

மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடத்து வரும் வன்முறை சம்பவங்களை கண்டித்து திரிபுரா மாநிலம் அகர்தலாவில் அம்மாநில முதல்வர் பிப்லப் தேவ் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்குவங்கத்தில் பல பகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர், காயமடைந்துள்ளனர். இதற்கு முதல்வர் மம்தா பொறுப்பேற்க வேண்டும். 

மேலும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வி அடைந்துள்ளார். மக்களே அவரை நிராகரித்துள்ள நிலையில், எப்படி முதல்வராக முடியும். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர் பதவியில் அமர வேண்டும். முதல்வர் பதவிக்கான தார்மீக உரிமையை மம்தா இழந்து விட்டார் என்று பிப்லப் தேவ் குமார் விமர்சித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com