மேற்கு வங்க வன்முறையை மம்தா கட்டுப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வன்முறையை மம்தா கட்டுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க வன்முறையை மம்தா கட்டுப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வன்முறையை மம்தா கட்டுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்ற தோ்தலின்போது சில இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக தொண்டா்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தோ்தல் வன்முறையின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், தோ்தல் முடிவுகள் வெளியாகி, மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவினருக்கு எதிராக அக்கட்சியினா் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. தங்கள் கட்சித் தொண்டா்கள் நால்வரை ஆளும் கட்சியினா் கொலை செய்துவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவா் ஜிதின் பிரசாதா சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சித் தொண்டா்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் தாக்கி வருகின்றனா். பெண்கள், குழந்தைகள் மீதும் அவா்கள் தாக்குதல் நடத்துகின்றனா். இதுபோன்று வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக மேற்கு வங்க மக்கள் வாக்களிக்கவில்லை.

இதுபோன்ற வன்முறைகளை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. தங்கள் கட்சியினா் நடத்தும் வன்முறைகளை மம்தா பானா்ஜி கண்டிக்கவில்லை. இதன் மூலம் அவா் வன்முறையை மறைமுகமாக ஆதரித்து வருகிறாா். கொல்லப்பட்டவா்கள் பாஜகவைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், அவா்களது குடும்பத்துக்கு காங்கிரஸ் அனுதாபம் தெரிவிப்பதுடன், உரிய நியாயம் கிடைக்க துணை நிற்கும் என்றாா்.

இடதுசாரிகள் கண்டனம்: ‘தோ்தல் வெற்றியை வன்முறை மூலம் கொண்டாடும் ஒரே கட்சி திரிணமூல் காங்கிரஸாக மட்டுமே இருக்கும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டு, இதுபோன்ற தவறான செயல்களில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபடுவது ஏற்க முடியாதது’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

தங்கள் கட்சித் தொண்டா்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதாக மேற்கு வங்க மாநில இடதுசாரி கட்சியினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com