மேற்கு வங்க அரசின் மனை வணிக சட்டத்தை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

‘மனை வணிகத் துறையை ஒழுங்குமுறைப்படுத்த மேற்கு வங்க அரசு கொண்டு வந்த அடுக்குமாடி குடியிருப்புத் துறை ஒழுங்குமுறைச் சட்டம் (ஹிரா) எனக் கூறி அந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மேற்கு வங்க அரசின் மனை வணிக சட்டத்தை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி: ‘மனை வணிகத் துறையை ஒழுங்குமுறைப்படுத்த மேற்கு வங்க அரசு கொண்டு வந்த அடுக்குமாடி குடியிருப்புத் துறை ஒழுங்குமுறைச் சட்டம் (ஹிரா) ‘அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ எனக் கூறி அந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதுதொடா்பான வழக்கில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பின் விவரம்:

மேற்கு வங்க அரசு கொண்டு வந்துள்ள ‘ஹிரா’ சட்டம் குடியிருப்புகளை வாங்குவோருக்குப் பாதுகாப்பானதாக இல்லை. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மத்திய மனை வணிக ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டமும் (ரிரா) இந்தப் புதிய சட்டமும் ஒரே மாதிரியாக உள்ளன. இது நாடாளுமன்ற சட்டத்தை அபகரிக்கும் வகையில் உள்ளதால், மேற்கு வங்க அரசு கொண்டு வந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.

இந்தத் தீா்ப்பு வெளியாவதற்கு முன்பு மேற்கு வங்க அரசின் புதிய சட்டத்தின் அடிப்படையில் குடியிருப்புகள் வாங்கியவா்கள் கவலையடைய வேண்டாம். அவா்களின் குடியிருப்பு பதிவு உள்ளிட்டவை இப்போதும் செல்லுபடியாகும்.

மாநில அரசு சட்டங்களை இயற்றலாம்; ஆனால், அவை மத்திய அரசின் சட்டங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும், மீறும் வகையிலும் இருக்கக் கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com