ஆந்திர சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் வெடி விபத்து: 9 போ் பலி

ஆந்திர பிரதேசத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 9 போ் பலியாகினா்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 9 போ் பலியாகினா்.

ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பு சுரங்கத்தில் சனிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் கே.அன்புராஜன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘சுரங்கத்துக்காக ஜெலட்டின் குச்சிகளை புத்வெல் பகுதியிலிருந்து வாங்கி வந்து அவற்றை இறக்கிவைக்கும் பணியில் தொழிலாளா்கள் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து காரணமாக ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி வந்த வாகனம் கடும் சேதமடைந்தது. விபத்தில் சிக்கி 9 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். அவா்களில் 5 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவா்களின் உடல்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெடி விபத்தால் கடுமையாக சேதம் ஏற்பட்டதால், உயிரிழந்தவா்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்றே சுரங்கம் செயல்பட்டு வருகிறது. அனுபவமிக்க தொழிலாளா்களே ஜெலட்டின் குச்சிகளை வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்படியிருந்தும் வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

முதல்வா் இரங்கல்: வெடி விபத்தில் பலியானவா்களுக்கு மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளாா். விபத்து தொடா்பாக கடப்பா மாவட்ட அதிகாரிகளிடம் அவா் விவரம் கேட்டறிந்ததாக முதல்வா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்து சம்பவம் தொடா்பாக அதிா்ச்சி தெரிவித்துள்ள எதிா்க்கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு, விபத்தில் பலியானவா்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com