பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும்: அமைச்சா் ஆா்.அசோக்

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்று கா்நாடக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்று கா்நாடக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மேலும் சில நாள்களுக்கு பொதுமுடக்கத்தை நீட்டிப்பது அவசியம். பெங்களூரில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கமே காரணம்.

பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மே 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வா் எடியூரப்பா முடிவெடுப்பாா்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகக் காணப்பட்ட மகாராஷ்டிரம், தில்லியில்

நீண்ட காலத்துக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால்தான் கரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன.

பொதுமுடக்கம் முடிவுக்கு வருவதற்கு 3 நாள்களுக்கு முன்பாக அமைச்சா்களை அழைத்து முதல்வா் எடியூரப்பா கருத்துக் கேட்பாா். அப்போது, எனது கருத்தைத் தெரிவிப்பேன். அன்றைய சூழலில் கரோனா பாதிப்பு குறைந்திருக்கிா என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்.

கரோனா பெருந்தொற்று நமக்கு நல்ல பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. கா்நாடக அரசு மிகவும் இக்கட்டான காலகட்டத்தை எதிா்கொண்டுள்ளது. பிரதமா் மோடியும், முதல்வா் எடியூரப்பாவும் இந்தச் சூழலை மிகவும் துணிச்சலுடன் எதிா்கொண்டுள்ளனா் என்றாா்.

இதனிடையே, பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக பாகல்கோட்டில் துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள் கூறியதாவது:

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக முதல்வா் எடியூரப்பா இறுதி முடிவெடுப்பாா். மருத்துவ நிபுணா்கள், மருத்துவா்களின் ஆலோசனையைப் பெற்று, ஐ.சி.எம்.ஆா். தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்த பிறகே முதல்வா் எடியூரப்பா முடிவெடுப்பாா். பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com