கேதார்நாத் கோயில் நடை திறப்பு

கடுமையான கரோனா நெறிமுறைகளுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
கேதார்நாத் கோயில் நடை திறப்பு 
கேதார்நாத் கோயில் நடை திறப்பு 

ருத்ரபிரயாக்: கடுமையான கரோனா நெறிமுறைகளுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் யாத்ரீகர்களுக்காக இன்று திறக்கப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோயிலின் வாயில்கள் திறக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. 

கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி கோயில்கள் மே 14-ஆம் தேதியன்று திறக்கப்பட்டன. 

"அனைவரையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பாபா கேதார்நாத்தை வேண்டிக்கொள்கிறேன்" என்று உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு மாற்றப்பட்ட சிவன் சிலை மே 14 அன்று கேதார்நாத்தில் மீண்டும் நிறுவப்பட்டு மே 17-ஆம் தேதி இன்று அதிகாலை 5.00 மணி கோயில் நடை திறக்கப்பட்டது. 

குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி விட்டுச் செல்லுங்கள், முகக்கவசம் அணியுங்கள் என நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. 

குளிர்காலத்தையொட்டி கடந்தாண்டு நவம்பரில் கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com