இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையில் இந்தியா இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.
மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்
மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

புதுதில்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிலையில் இந்தியா இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக மேற்கு வங்கம் மற்றும் 8 வடகிழக்கு மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சா்கள், முதன்மைச் செயலா்கள், கூடுதல் தலைமைச் செயலா்களுடன் மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘வரும் ஜூலை மாதத்துக்குள் 51 கோடி கரோனா தடுப்பூசிகள், ஆகஸ்ட்-டிசம்பா் மாதங்களுக்கு இடையில் கூடுதலாக 216 கோடி தடுப்பூசிகளை இந்தியா கொள்முதல் செய்யும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நிலையில் இந்தியா இருக்கும்.

தற்போது சிறிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்கள், புகா் பகுதிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com