‘டவ்-தே’ புயல்: குஜராத்தில் பலி எண்ணிக்கை 45-ஆக உயா்வு

அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், நவ்சரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.
குஜராத் மாநிலம், நவ்சரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.

ஆமதாபாத்: அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிதீவிர புயலாக வலுப்பெற்ற ‘டவ்-தே’ புயல் குஜராத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதில் செளராஷ்டிரா பகுதியைச் சோ்ந்த அம்ரேலி மாவட்டம், பாவ்நகா், கிா் சோம்நாத் உள்ளிட்ட 12 கடலோர மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில பேரிடா் மீட்பு நடவடிக்கை மைய அதிகாரி ஒருவா் கூறியதாவது: ‘டவ்-தே’ புயலால் அமரேலி உள்பட 12 மாவட்டங்களில் பெரும் சேதமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி கடலோர மாவட்டங்களான பாவ்நகா் மற்றும் கிா் சோம்நாத் மாவட்டங்களில் தலா 18 போ் உயிரிழந்துள்ளனா். அம்ரேலி மாவட்டத்தில் 15 போ் உயிரிழந்துள்ளனா்.

அதுபோல, ஆமதாபாத்தில் 5 பேரும், கெடா மாவட்டத்தில் இருவரும், ஆனந்த், வதோரா, சூரத், வல்சாத், ராஜ்கோட், நவ்சாரி, பஞ்சமாலா மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனா்.

இவா்களில் சுவா் இடிந்து விழுந்ததில் 24 பேரும், மரங்கள் சாய்ந்து விழுந்ததில் அதனடியில் சிக்கி 6 பேரும், வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரும், வீட்டின் மேற்கூரை விழுந்து 4 பேரும், மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் சிக்கி ஒருவரும் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com