வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய புதிய வலைதளம்: ஜூன் 7-இல் அறிமுகம்

வரி செலுத்துவோா் வருமான வரிக் கணக்குகளை தடையின்றி இணையவழியில் தாக்கல் செய்வதற்காக, புதிய வலைதளத்தை வருமான வரித் துறை ஜூன் மாதம் 7-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய புதிய வலைதளம்: ஜூன் 7-இல் அறிமுகம்

புது தில்லி: வரி செலுத்துவோா் வருமான வரிக் கணக்குகளை தடையின்றி இணையவழியில் தாக்கல் செய்வதற்காக, புதிய வலைதளத்தை வருமான வரித் துறை ஜூன் மாதம் 7-ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித் தொடா்பாளா் சுரபி அலுவாலியா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதிய வலைத்தளம், எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவுடனேயே வரியை திரும்பச் செலுத்தும் நடைமுறை தொடங்கிவிடும். வரி செலுத்துவோரின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் புதிய அழைப்பு மையம் திறக்கப்படும்.

புதிய வலைதளத்தில் உள்ள அனைத்து வசதிகளுடன் செயலியும் அறிமுகம் செய்யப்படும். இதனால், செயலி வழியாகவும் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்யலாம். இணைய வழியிலேயே வரித் தொகையுயம் செலுத்தலாம்.

ஜ்ஜ்ஜ்.ண்ய்ஸ்ரீா்ம்ங்ற்ஹஷ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற பெயரில் புதிய வலைதளம் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள  வலைத்தளம் வரும் ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து 6-ஆம் தேதி வரை செயல்படாது. இந்த நாள்களில் யாரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com