6 மாதங்களைக் கடந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.
6 மாதங்களை கடந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்
6 மாதங்களை கடந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் தில்லியில் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். தொடக்கம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. கரோனா சூழலின் மத்தியிலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

மேலும் விவசாயிகளின் 6 மாத கால போராட்டத்தின் தீவிரத்தை வலியுறுத்தும் வகையில் மே 26 அன்று நாடு தழுவிய கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள 12 பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com