ரயில்கள் மூலம் 24 மணி நேரத்தில் 969 டன் ஆக்ஸிஜன் விநியோகம்

12 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் மூல 969 டன் திரவநிலை ஆக்ஸிஜன் 6 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் மூலம் 24 மணி நேரத்தில் 969 டன் ஆக்ஸிஜன் விநியோகம்
ரயில்கள் மூலம் 24 மணி நேரத்தில் 969 டன் ஆக்ஸிஜன் விநியோகம்


புது தில்லி: யாஸ் புயல் காரணமாக பல மாநிலங்களில் வானிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 12 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் மூல 969 டன் திரவநிலை ஆக்ஸிஜன் 6 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே அறிவித்துள்ளது.

12 ஆக்ஸிஜன் விரைவு ரயில்களில் 3 தமிழகத்துக்கும், 4 ரயில்கள் ஆந்திரத்துக்கும், தில்லி, ம.பி., உ.பி., அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு ரயிலும் சென்றடைந்தன.

யாஸ் புயல் கரையை கடந்துள்ள ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜன், 12 ரயில்கள் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

யாஸ் புயல் காரணமாக சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், மிக அவசிய, அவசரகால உதவியை ரயில்வே மேற்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com