முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டுக்கு அருகில் தடுப்பூசி மையங்கள்

முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது வீட்டுக்கு அருகிலேயே தடுப்பூசி மையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை
முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் வீட்டுக்கு அருகில் தடுப்பூசி மையங்கள்

புது தில்லி: முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது வீட்டுக்கு அருகிலேயே தடுப்பூசி மையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பகிா்ந்து கொண்டுள்ளது.

முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு அருகே தடுப்பூசி மையங்களை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது.

உடல் நிலை காரணமாக அதிகம் நடமாட முடியாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய மத்திய அமைச்சகத்தின் தொழில்நுட்ப குழு இந்த பரிந்துரையை சமா்பித்தது. இந்த பரிந்துரைகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தகுதியுடைவா்களுக்கு மட்டுமே வீட்டுக்கு அருகே தடுப்பூசி மையம் ஏற்பாடு செய்யப்படும். மற்ற வயதினருக்கு, தற்போதுள்ள கொவிட் தடுப்பூசி மையங்களிலேயே தடுப்பூசி போடப்படும்.

ஆதட்டுக்கு அருகே அமைக்கப்படும் தடுப்பூசி மையங்களுக்கு தகுதியானவா்கள்:

தடுப்பூசி போடாமல் இருக்கும் அல்லது முதல் டோஸ் போட்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள். உடல் நிலை அல்லது மருத்துவ காரணங்கள் காரணமாக மாற்றுத்திறனாளியாக உள்ள 60 வயதுக்கு உள்பட்டவா்கள். இதற்கான விரிவான வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com