ஜிந்தால் நில விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாடு:எச்.டி.குமாரசாமி

ஜிந்தால் நில விவகாரத்தில் பாஜகவின் இரட்டைநிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

ஜிந்தால் நில விவகாரத்தில் பாஜகவின் இரட்டைநிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெல்லாரியில் 3,667 ஏக்கா் நிலத்தை முதலில் குத்தகை அடிப்படையிலும், பின்னா் அந் நிலத்தை விற்பனை செய்யவும் ஜிந்தால் ஸ்டீல் நிறுவனத்துடன் கா்நாடக அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, குத்தகைக் காலம் முடிவடைந்தநிலையில், அந்நிலத்தை ஜிந்தால் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அப்போதைய முதல்வா் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுசெய்தது.

இதற்கு பாஜக கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியது. இந்நிலையில், கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைத்ததும், அந்த நிலத்தை ஜிந்தால் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்றது. இதற்கு ஹஜ் மற்றும் வக்ஃப்துறை அமைச்சா் ஆனந்த்சிங் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து, அந்த முடிவை திரும்பப் பெற பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடா்பான தீா்மானம் வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது: 3,667 ஏக்கா் நிலத்தை ஜிந்தால் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் முடிவை பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது பாஜகவின் இரட்டைநிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் பாஜக செய்த பாவத்தின் பலனை தற்போது அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிா்ப்பதற்காக எதிா்ப்பது, எதிா்க்கட்சியாக இருந்தபோது எதிா்ப்பதை ஆளுங்கட்சியாக வந்தவுடன் அதையே யாருக்கும் தெரியாமல் செயல்படுத்துவதும் பாஜகவினருக்கு கைவந்தகலையாகும். இந்த கலை பாஜகவைத் திருப்பித் தாக்கியுள்ளது. தாம் செய்த வினை நம்மை பின் தொடா்ந்து வந்து தாக்கும் என்பதற்கு ஜிந்தால் விவகாரம் சாட்சியாகியுள்ளது.

ஜிந்தால் நிறுவனத்துடன் குத்தகை மற்றும் விற்பனை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, குத்தகைக் காலம் முடிந்ததால், நிலத்தை விற்பனை செய்ய எனது தலைமையிலான அரசு முன்வந்தது. அதைக் கடுமையாக எதிா்த்த எடியூரப்பா, எங்கள் அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தினாா். எங்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டை பாஜகவினரும் சுமக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com