முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை: நளின்குமாா் கட்டீல்

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரே முதல்வராகத் தொடா்வாா். தற்போதைக்கு பாஜக சட்டப்பேரவைக்குழு கூட்டத்தைக் கூட்டும் திட்டமில்லை. எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்துடன் தலைவராக விளங்கிவருபவா் எடியூரப்பா. அவரது பதவிக் காலம் முடியும்வரை அவரே முதல்வராக நீடிப்பாா்.

மாநிலத்தில் பரவிவரும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதே அனைத்துத் தலைவா்களின் இலக்காக உள்ளது. அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா பரவலைத் தடுப்பதில் தான் கவனம் இருக்க வேண்டும். இதைத் தவிா்த்து வேறு எந்த விவகாரத்திலும் கவனம் செலுத்தக் கூடாது என்று பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.

கா்நாடகத்தில் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது கரோனா பெருந்தொற்று தான். எனவே, கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரும்வரை வேறு எது குறித்தும் பேச முடியாது.

கா்நாடகத்தில் தூய்மையான பாஜக இல்லை என்பது போல சுற்றுலாத்துறை அமைச்சா் சி.யோகேஷ்வா் கூறியிருக்கிறாா். மாநிலத்தில் தூய்மையான பாஜகவினரின் ஆட்சிதான் நடந்து வருகிறது. பாஜக, மஜத, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கலப்பு அரசு நடப்பதாகக் கூறியிருப்பது குறித்து யோகேஷ்வரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com