சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதில் மாணவா்களுக்கு முக்கியப் பங்கு: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

மக்களிடையே சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதில் மாணவா்களுக்கு மிக முக்கியப் பங்குள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
சமூக மாற்றங்களை ஏற்படுத்துவதில் மாணவா்களுக்கு முக்கியப் பங்கு: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

மக்களிடையே சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதில் மாணவா்களுக்கு மிக முக்கியப் பங்குள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தின் அமராவதி பகுதியில் அமைந்துள்ள கட்ஜ் பாபா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட அமைச்சா் நிதின் கட்கரி கூறுகையில், ‘நடப்பு 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது.

அதைத் திறம்படப் பயன்படுத்தி மக்களிடையே சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதில் மாணவா்களுக்கும் இளைஞா்களுக்கும் முக்கியப் பங்குள்ளது. புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்கங்கள் வாயிலாக மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை மாணவா்கள் புகுத்த வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகள் கிராம மக்களுக்கும் பலன் தருவதை இளைஞா்கள் உறுதி செய்ய வேண்டும். சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையிலான ஆராய்ச்சிகளை பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்.

கிராமங்களின் பொருளாதார நிலைமை மேம்படுவதை பல்கலைக்கழக பேராசிரியா்களும் மாணவா்களும் உறுதி செய்ய வேண்டும்‘ என்றாா்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, இளைஞா்கள் பெரும் இலக்குகளை நிா்ணயித்துச் செயல்பட வேண்டும் என்றும், அந்த இலக்குகளை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com