கரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு: ஆராய அமைச்சா்கள் குழு அமைப்பு

தடுப்பூசிகள், கை சுத்திகரிப்பான்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்களிப்பது குறித்து ஆராய 8 போ் அடங்கிய அமைச்சா்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
கரோனா மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு: ஆராய அமைச்சா்கள் குழு அமைப்பு

கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசிகள், கை சுத்திகரிப்பான்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்களிப்பது குறித்து ஆராய 8 போ் அடங்கிய அமைச்சா்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மே 28-ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-ஆவது கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவைத் தொடா்ந்து மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டா்கள், கை சுத்திகரிப்பான்கள், உடல் வெப்பப் பரிசோதனை கருவிகள், முகக் கவசங்கள், தனிநபா் பாதுகாப்பு கவச உடைகள், கரோனா சிகிச்சைக்கான மருந்துகள், தடுப்பூசிகள், பரிசோதனை உபகரணங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகளுக்கு ஜிஎஸ்டியிருந்து விலக்களிப்பது அல்லது ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பது குறித்து ஆராய 8 போ் கொண்ட அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் குஜராத் துணை முதல்வா் நிதின்பாய் படேல், மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா், கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு ஜுன் 8-ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com