கரோனா நோயாளிகளுக்கு ரூ.10-க்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர்; சிகிச்சைக்கும் குறைவான கட்டணம்

தெலங்கானாவில் கரோனா நோயாளிகளுக்கு வெறும் ரூ.10 கட்டணத்துக்கு சிகிச்சை அளிக்கிறார் மருத்துவர் விக்டர் இம்மானுவேல். 
மருத்துவர் விக்டர் இம்மானுவேல்
மருத்துவர் விக்டர் இம்மானுவேல்

தெலங்கானாவில் கரோனா நோயாளிகளுக்கு வெறும் ரூ.10 கட்டணத்துக்கு சிகிச்சை குறித்த ஆலோசனை வழங்குகிறார் மருத்துவர் விக்டர் இம்மானுவேல். 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள், சிகிச்சை மருந்துகள், தடுப்பூசி, ஆக்சிஜன் என தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்த ஒரு சூழ்நிலையில் ஹைதராபாத்தில் தனியார் கிளினிக் வைத்து நடத்தி வரும் மருத்துவர் விக்டர் இம்மானுவேல், ஆலோசனைக் கட்டணமாக(consultation fee) ரூ.10 மட்டுமே வசூலிக்கிறார். பொடுப்பால் பகுதியில் உள்ள ப்ரஜ்வாலா கிளினிக் என்ற பெயரில் நடத்தி வருகிறார். கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் மற்ற மருத்துவமனைகளைக் காட்டிலும் குறைவான கட்டணமே பெறுகிறார். 

கடந்த ஆண்டு முதல் இதுவரை தன்னிடம் 20,000 முதல் 25,000 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கும் அவர், மேலும் 500 நோயாளிகளுக்கான சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தையும் தொடங்கி கண்காணித்து வருகிறார். இவரது வழிகாட்டுதலின்படி நூற்றுக்கணக்கானோர் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 

இவரிடம் சிகிச்சை பெற்ற ஜானகி ராம் கூறுகையில், எங்கள் குடும்பத்தில் ஏழு பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது மருத்துவரின் அறிவுரைப்படி ஏழு பேரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டோம். தொடர்ந்து அவரது வழிகாட்டுதலின்படி சிகிச்சை எடுத்துக்கொண்டோம். இப்போது அனைவருமே கரோனாவிலிருந்து மீண்டுவிட்டோம். வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் எங்கள் ஏழு பேருக்கும் சேர்த்து கண்டிப்பாக குறைந்தது 25 லட்சம் வரை செலவாகியிருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com