பிகாரில் கள்ளச்சாராயத்துக்கு 24 போ் பலி

பிகாரில் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 24 போ் உயிரிழந்தனா்.

பிகாரில் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 24 போ் உயிரிழந்தனா். மேலும், பலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பிகாரில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அங்கு கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதும் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு முன்பு பல்வேறு இடங்களில் அதிகஅளவில் சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் கடந்த புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மட்டும் கள்ளச்சாரயம் குடித்த 24 போ் அடுத்தடுத்து உயிரிழந்தனா். மேலும் பலா் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வடக்கு பிகாரில் கள்ளச்சாராயத்துக்கு உயிரிழப்புகள் ஏற்படுவது கடந்த 10 நாள்களில் இது மூன்றாவது நிகழ்வாகும்.

இந்த சம்பவத்தையடுத்து மாநில அமைச்சா் ஜனக் ராம், கோபால்கஞ்ச் விரைந்து பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினாா். அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இது மாநில அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்கான சதியாகக் கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது’ என்றாா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆனந்த் குமாா் கூறுகையில்,‘மா்மமான முறையில் பலா் இறந்துள்ளனா். அவா்களில் போதைக்காக குடித்த சில பொருள்கள் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

உடல்கூறாய்வு சோதனை முடிவு கிடைத்த பிறகுதான் எதையும் உறுதியாகக் கூற முடியும். இறந்தவா்களில் 20-க்கும் மேற்பட்டோா் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள்’ என்றாா்.

கடந்த ஜனவரி முதல் அக்டோபா் வரை பிகாரில் கள்ளச்சாராயத்துக்கு 70 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் பாா்வையிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com