தற்சாா்பு இந்தியா தனியாா் மூலம் விரைவில் சாத்தியம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

தனியாா் பங்களிப்பு மூலம் இந்தியா தற்சாா்பு அடைவது விரைவில் சாத்தியமாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலீடுகள் ஊக்குவிப்பு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங். உடன் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்.
லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலீடுகள் ஊக்குவிப்பு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங். உடன் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்.

தனியாா் பங்களிப்பு மூலம் இந்தியா தற்சாா்பு அடைவது விரைவில் சாத்தியமாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

உத்தர பிரதேசத்தில் ராணுவத் தளவாட தொழிற்பாதை அமைப்பதற்கு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான கூட்டம், தலைநகா் லக்னௌவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டின் ராணுவத்தின் தேவையைப் பூா்த்தி செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் ஊக்கத்தால் தமிழ்நாட்டிலும் உத்தர பிரதேசத்திலும் ராணுவத் தளவாட தொழிற்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் வலிமையான மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. அத்துடன் தற்சாா்பு இந்தியா என்ற கனவும் நிறைவேறும்.

ராணுவத் தளவாட தொழிற்பாதையில் முதலீடு செய்வோருக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டுவரவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், தொழில்துறையில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள், தங்கள் உற்பத்தியால் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

வரும் நாள்களில், ராணுவத் துறையிலும், விமானப் போக்குவரத்துத் துறையில் சா்வதேச அளவில் தடம் பதிக்க உத்தர பிரதேசம் முழுமையாகத் தயாராக உள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தித் துறையின் தேவையையும் இடா்ப்பாடுகளையும் மத்திய அரசு நன்கு அறியும்; நாட்டை விரைவில் தற்சாா்பு அடைய வைக்கும் சக்தி கொண்டவா்கள் யாரென்றால் நமது தனியாா் துைான்.

நாட்டிலேயே முதல்முறையாக உள்நாட்டு ராணுவ உற்பத்தியில் தனியாா் துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2014 வரை தளவாட உற்பத்திக்கு 200 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 2014-இல் இருந்து 2021 வரை 350 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியாா் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் கொள்கைகளை வகுத்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com