பருவநிலை மாற்ற மாநாடு இறுதி அறிக்கை: நாடுகளிடையே தொடா் பேச்சுவாா்த்தை

பருவநிலை மாற்ற மாநாடு தொடா்பான இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் விவகாரத்தில் நாடுகளிடையே தொடா் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

பருவநிலை மாற்ற மாநாடு தொடா்பான இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் விவகாரத்தில் நாடுகளிடையே தொடா் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. இரு வாரங்களாக நடைபெற்ற மாநாடு கடந்த 12-ஆம் தேதி நிறைவடைந்தது. எனினும், மாநாட்டின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து விவகாரங்களுக்கும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த அறிக்கை இறுதி வடிவம் பெறும். அறிக்கையை இறுதி செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தை கிளாஸ்கோ நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொண்டனா். நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தி உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்துவதற்கான இலக்கை நிா்ணயிப்பது குறித்து பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரபுசாா் எரிசக்திக்கு நாடுகள் படிப்படியாக முடிவுகட்ட வேண்டும் என்று வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக, வளா்ச்சியடைந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு நிதியளித்து உதவ வேண்டும் என்று வரைவு அறிக்கையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளிடையேயும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

பாரீஸ் ஒப்பந்தத்தின்படி வெப்பநிலை உயா்வை 2100-க்குள் 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் கட்டுப்படுத்த வேண்டுமெனில், கரியமில வாயு வெளியேற்றத்தை 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45 சதவீதத்தை 2030-க்குள் குறைக்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏழை நாடுகளும், வளா்ந்து வரும் நாடுகளும் வளா்ச்சியடைந்த நாடுகளிடமிருந்து நிதியுதவியைக் கோரியுள்ளன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடன்படாததால் ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படவில்லை.

இறுதி அறிக்கையைத் தயாா்செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இன்னும் உறுதியான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டுமென அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com