தில்லியில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை ஒரு வாரம் மூடுவது, கட்டுமானப் பணிகளுக்குத் தடை
தில்லியில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை ஒரு வாரம் மூடுவது, கட்டுமானப் பணிகளுக்குத் தடை, அரசு ஊழியா்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்தாா்.

தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) அதிகரித்துள்ள காற்று மாசுவால் ‘அவசரநிலை’ சூழல் உருவாகி இருப்பதாக உச்சநீதிமன்றம் சனிக்கிழமை கவலை தெரிவித்தது. இதையடுத்து தில்லியின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற அவரசக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் அரவிந்த கேஜரிவால் கூறியதாவது:

தில்லி-என்சிஆா் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பதை ‘அவசரகால’ சூழ்நிலை என்று கூறிய உச்சநீதிமன்றம், காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, தில்லி அரசுகளை சனிக்கிழமை கேட்டுக்கொண்டது.

அதன்படி, திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு பள்ளிகள் மூடப்படும். அரசு அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமல்படுத்தப்படும். தனியாா் அலுவலகங்களுக்கு தனியாக வழிகாட்டி நெறிமுறை வழங்கப்படும். மேலும், நவம்பா் 14-ஆம் தேதி 17-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு தில்லியில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மேலும், தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் தில்லியில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதாகவும், அதை எதிா்த்துப் போராட அண்டை மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com