5,000 பெண்களுக்கு மகப்பேறு பார்த்த செவிலியர் பிரசவத்தில் பலி

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது குழந்தைகளை ஈன்றெடுக்க உதவி செய்த செவிலியர், பிரசவத்துக்குப் பிறகான உடல்நலப் பாதிப்புகளால் பலியானது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
5,000 பெண்களுக்கு மகப்பேறு பார்த்த செவிலியர் பிரசவத்தில் பலி
5,000 பெண்களுக்கு மகப்பேறு பார்த்த செவிலியர் பிரசவத்தில் பலி


ஔரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது குழந்தைகளை ஈன்றெடுக்க உதவி செய்த செவிலியர், பிரசவத்துக்குப் பிறகான உடல்நலப் பாதிப்புகளால் பலியானது குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஜோதி காவ்லிக்கு, நவம்பர் 2ஆம் தேதி ஹிங்கோலி அரசு மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்ட சில பிரச்னைகளால் ஜோதி மரணமடைந்தார்.

அவர், அதே ஹிங்கோலி அரசு மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்ததும், தனது பிரசவத்துக்கு முதல்நாள் வரை அங்கு பணியாற்றிவிட்டு, பிறகு பணி முடிந்து நேராக மருத்துவமனையிலேயே பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதையும் குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

இங்கு அவர் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு வேறொரு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 3 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

பிரசவத்துக்குப் பிறகு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அவர் நான்டெட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 15 பிரசவங்கள் நடக்கும். அவரது ஐந்தாண்டு பணிக்காலத்தில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு, பிரசவம் பார்த்திருப்பார். ஆனால் இன்று அவர் பிரசவத்தின் போது மரணமடைந்திருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவமனையில் அவருடன் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com