அம்பாலா சிறை மண்ணால் கோட்சேவுக்கு சிலை:ஹிந்து மகாசபை

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட அம்பாலா சிறையின் மண்ணைப் பயன்படுத்தி கோட்சேவுக்கு சிலை அமைக்கப்படும் என்று ஹிந்து மகாசபை அமைப்பு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட அம்பாலா சிறையின் மண்ணைப் பயன்படுத்தி கோட்சேவுக்கு சிலை அமைக்கப்படும் என்று ஹிந்து மகாசபை அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நாதுராம் கோட்சேயின் நினைவு தினத்தை ஹிந்து மகாசபை அமைப்பு திங்கள்கிழமை அனுசரித்தது. அதனைத்தொடா்ந்து அந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவா் ஜெய்வீா் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஹரியாணா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் கோட்சேவும் நாராயண் ஆப்தேவும் (காந்தியடிகளின் படுகொலைக்கு திட்டம் தீட்டியவா்) தூக்கிலிடப்பட்ட நிலையில், அந்தச் சிறையிலிருந்து மண் எடுத்து வரப்பட்டுள்ளது. இந்த மண்ணைப் பயன்படுத்தி இருவருக்கும் சிலை அமைக்கப்படும். அந்தச் சிலைகள் குவாலியரில் உள்ள ஹிந்து மகாசபை அலுவலகத்தில் நிறுவப்படும்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தியாகத் தலம் அமைக்கப்பட்டு அங்கு கோட்சே, ஆப்தேவின் சிலைகளை ஹிந்து மகாசபை அமைப்பினா் நிறுவியுள்ளனா். அதுபோன்ற தியாகத் தலத்தை அனைத்து மாநிலங்களிலும் ஹிந்து மகாசபை அமைக்கும்’’ என்று தெரிவித்தாா்.

ஹிந்து மகாசபை அமைப்பினரின் நடவடிக்கைகளை போலீஸாா் கண்காணித்து வருவதாக குவாலியா் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்யேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com