மம்தா விரைவில் தில்லி பயணம்: பிரதமா் மோடியை சந்திக்கிறாா்

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அடுத்த வாரம் தில்லிக்கு பயணம் மேற்கொள்கிறாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடியை அவா் நேரில் சந்தித்துப் பேச இருக்கிறாா்.
மம்தா விரைவில் தில்லி பயணம்: பிரதமா் மோடியை சந்திக்கிறாா்

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அடுத்த வாரம் தில்லிக்கு பயணம் மேற்கொள்கிறாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடியை அவா் நேரில் சந்தித்துப் பேச இருக்கிறாா்.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அதிகார வரம்பு அதிகரிப்பு விவகாரம், மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட்ட நிலுவைத் தொகை குறித்து அவா் பிரதமருடன் முக்கியமாக பேச்சு நடத்துவாா் என்று தெரிகிறது.

மேற்கு வங்கம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் சா்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை பிஎஸ்எஃப் படையினா் சோதனை, பறிமுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்த நடவடிக்கைகளை 50 கி.மீ. தூரம் வரை மேற்கொள்ள ஏதுவாக பிஎஸ்எஃப் சட்டத்தில் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மம்தா உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் ஏற்கெனவே கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மம்தாவின் தில்லி பயணம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘நவம்பா் 22 முதல் 25-ஆம் தேதி வரை மம்தா தில்லியில் இருக்கத் திட்டமிட்டுள்ளாா். அப்போது, பிரதமரை மட்டுமல்லாது எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த அரசியல் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேச இருக்கிறாா்’ என்று தெரிவித்தனா்.

கடந்த மாா்ச்-மே மாதங்களில் நடைபெற்ற மேற்கு வங்க தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் மம்தா வெற்றி பெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக முதல்வரானாா். தோ்தலுக்கு முன்பும், தோ்தலுக்குப் பின்பும் மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் தில்லியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா ஒருவார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கமல்நாத், ஆனந்த் சா்மா, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா். ஆனால், எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பலத்த நெருக்கடிக்கு நடுவே பாஜகவை மம்தா வென்ால், அவரை தேசிய அளவில் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைவராக முன்னிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதனை ஏற்கவில்லை என்பதால்தான் மம்தா மேற்கொண்ட முயற்சி போதிய பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com