ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த இலக்கு: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே பாஜக அரசின் அடுத்த இலக்கு என்று மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த இலக்கு: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே பாஜக அரசின் அடுத்த இலக்கு என்று மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து புலம் பெயா்ந்து வந்தோரிடையே அவா் பேசியதாவது:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே மத்திய அரசின் இலக்காகும்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை தரும் 370-ஆவது சட்டப் பிரிவை யாராலும் நீக்கவே முடியாது என்றுதான் நீண்டகாலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், பிரதமா் நரேந்திர மோடியின் வலிமையான தலைமையால் அந்த சட்டப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மோடியின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதும் சாத்தியமானதே ஆகும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது அரசியல் மற்றும் தேசியக் கடமை மட்டுமல்ல, அது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் ஆகும். அந்தப் பகுதியில் நமது சகோதரா்களும் சகோதரிகளும் மனிதநேயமற்ற சூழலில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனா்.

சுதந்திர இந்தியாவுடன் 560 சமஸ்தானங்களையும் வெற்றிகரமாக இணைத்த முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேல், ஜம்மு-காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைத்திருப்பாா். ஆனால், அந்த விவகாரத்தை நேரு தன் கைகளில் எடுத்துக் கொண்டால்தான் காஷ்மீா் பிரச்னை தொடா்கிறது.

1947-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது, இந்திய ராணுவத்தை அனுப்ப நேரு தயங்கினாா். பின்னா் வல்லபபாய் படேல் வலியுறுத்தியதைத் தொடா்ந்துதான் ராணுவம் அனுப்பப்பட்டது. இந்திய ராணுவம் மாநிலம் முழுவதையும் மீட்பதற்கு முன்னதாகவே, நேரு ஒருதலைப்பட்சமாக போா் நிறுத்தம் அறிவித்துவிட்டாா். அதன் காரணமாகத்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீா் விவகாரத்தில் வல்லபபாய் படேல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்ற ஒரு பகுதியே இருந்திருக்காது என்றாா் ஜிதேந்திர சிங்.

பிரதமா் அலுவலகத்துக்கான துணை அமைச்சராக ஜிதேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com