போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும்: கே.சி.வேணுகோபால்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்திருத்ததையடுத்து, இன்று திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறுகையில்,

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முன்வந்தது நல்ல விஷயம். ஆனால், எம்.எஸ்.பி. மற்றும் போராட்டத்தின்போது உயிரிழந்த 800 விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு என பல்வேறு பிரச்னைகளுக்கு மத்திய அரசின் விளக்கத்தை நாடாளுமன்றத்தில் எதிர்பார்க்கிறோம் என்றார்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் குளிர் மற்றும் கரோனா பாதிப்பால் கிட்டத்திட்ட 800 விவசாயிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com