வெள்ள நிவாரண நிதி : கேட்டதும்...கிடைத்ததும்...

வெள்ள நிவாரண நிதி : கேட்டதும்...கிடைத்ததும்...

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பலத்த மழை, வெள்ளம், புயல்கள் தமிழகத்தை சேதப்படுத்தியுள்ளன.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பலத்த மழை, வெள்ளம், புயல்கள் தமிழகத்தை சேதப்படுத்தியுள்ளன. இந்த சேதங்களை மதிப்பிட மத்தியக் குழுக்கள் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளன. அப்போது, மாநில அரசு மிகப்பெரிய தொகைகளைக் கோரினாலும், மத்திய அரசு குறைந்த அளவிலேயே விடுவித்துள்ளன. அதன் விவரம்:-

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு மழை-வெள்ள பாதிப்பு: மாநில அரசு கோரியது: ரூ.25,912 கோடி. மத்திய அரசு அளித்தது: ரூ.1,727 கோடி.

2016-ஆம் ஆண்டு வா்தா புயல் பாதிப்பு: மாநில அரசு கோரியது: ரூ.22,573 கோடி. மத்திய அரசு தந்தது: ரூ.266.17 கோடி.

அதே ஆண்டில் ஏற்பட்ட வறட்சி பாதிப்பு: மாநில அரசு கோரியது: ரூ.39,565 கோடி. மத்திய அரசு தந்தது: ரூ.1,748.28 கோடி.

2017-ஆம் ஆண்டு ஒக்கி புயல் பாதிப்பு: தமிழக அரசு சீரமைப்புப் பணிக்காகக் கோரியது: ரூ.4,047 கோடி. நிவாரணத்துக்குக் கோரியது: ரூ.5,255 கோடி. மத்திய அரசு அளித்தது: ரூ.133 கோடி.

2018 கஜா புயல் பாதிப்பு: மாநில அரசு கோரியது: ரூ.15 ஆயிரம் கோடி: மத்திய அரசு தந்தது: ரூ.1,680 கோடி. இதேபோன்று, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு மாநில அரசு கோரிய தொகையில் இருந்து குறைவாகவே மத்திய அரசு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com