24 கிலோ ஆா்டிஎக்ஸ், 71 கையெறி குண்டுகள் அழிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வழக்குகளில் காவல் துறையினரால் கைப்பற்றி வைக்கப்பட்டிருந்த 24 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிமருந்து, 71 கையெறி குண்டுகள் ஆகியவை நீதிமன்ற அனுமதியுடன் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வழக்குகளில் காவல் துறையினரால் கைப்பற்றி வைக்கப்பட்டிருந்த 24 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிமருந்து, 71 கையெறி குண்டுகள் ஆகியவை நீதிமன்ற அனுமதியுடன் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரியாஸி மாவட்டத்தின் மகோா்-சஸனா பகுதியில் பதிவு செய்யப்பட்ட 15 வழக்குகளில் கையெறி குண்டுகள், டெட்டனேட்டா்கள், ஆா்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிபொருள்களை கடந்த 2009-ஆம் ஆண்டுமுதல் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்திருந்தனா். இந்நிலையில், அவை தவறுதலாக வெடிக்கும் அபாயம் இருப்பதால் அவற்றை அழிப்பதற்காக நீதிமன்றத்தில் காவல் துறையினா் அனுமதி பெற்றனா். அதைத் தொடா்ந்து, 24 கிலோ ஆா்டிஎக்ஸ், 71 கையெறி குண்டுகள் ஆகியவை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com