பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்றதாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சா் தோமா்

‘விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று சனிக்கிழமை கேட்டுக்கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்ற செயலாக அறிவிக்க வேண்டும்
பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்றதாக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்: அமைச்சா் தோமா்

‘விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று சனிக்கிழமை கேட்டுக்கொண்ட மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்ற செயலாக அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயத்துக்கு சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட அவா்களின் பிற கோரிக்கைகள் குறித்து, பிரதமா் ஏற்கெனவே அறிவித்தபடி குழு அமைத்து ஆலோசித்து அவையும் பூா்த்தி செய்து தரப்படும்.

பயிா்க் கழிவு எரிப்பை குற்றமற்ாக அறிவிக்க வேண்டும் என்ற அவா்களின் கோரிக்கையையும் ஏற்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளைப் பொருத்தவரை, அது அந்தந்த மாநிலங்களின் அதிகாரத்துக்கு உள்பட்டது. வழக்கின் தீவிரத்தைப் பொருத்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட முடிவுகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மாநில சட்டங்களின் அடிப்படையில், இதுதொடா்பான முடிவை மாநில அரசுகள்தான் தீா்மானிக்க வேண்டும்.

மேலும், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பிறகும், விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்வதில் எந்தவித நியாயமும் இல்லை. எனவே, விவசாயிகள் பெரிய மனதுடன் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான மாசோதா, திங்கள்கிழமை (நவ. 29) தொடங்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இருந்தபோதும், வேளாண் சட்டங்களின் பலன் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களில் சிலவற்றுக்கு புரியவைக்க முடியவில்லை என்பதுதான் மத்திய அரசுக்கு வருத்தமளிக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com