பிகார் சட்டப்பேரவை வளாகத்தில் மது பாட்டில்கள்: முதல்வர் அதிர்ச்சி

பிகார் சட்டப்பேரவை வளாகத்தில் காலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிகார் சட்டப்பேரவை வளாகத்தில் காலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது விலக்கு அமலில் உள்ள பிகார் மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்தில் காலி மது பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

இதுபற்றி முதல்வர் நிதீஷ் குமார் சட்டப்பேரவையில் பேசியது:

"துணை முதல்வரிடம் கேட்டேன். சட்டப்பேரவை வளாகத்தில் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார். இது மிகவும் மோசமானது. இதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? பேரவைத் தலைவர் முன்பாக இதைக் கூறுகிறேன். அவர் அனுமதித்தால், இன்றைக்கே அனைவரையும் விசாரிக்க உத்தரவிடுவேன்.

தலைமைச் செயலர் மற்றும் டிஜிபியை விசாரணை நடத்தச் சொல்வேன். பாட்டில்கள் இங்கு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதைச் செய்பவரைத் தப்பிக்கவிடக் கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

பிகார் சட்டப்பேரவைத் தலைவர் விஜயகுமார் சின்ஹா கூறுகையில், "நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com