நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் இயங்க வேண்டும் வேண்டும்: நிதின் கட்கரி

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் இயங்க வேண்டும் வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கிவைத்த அவர் பேசியதாவது, எத்தனால் உற்பத்தி நாட்டின் எரிபொருள் செலவுகளை குறைக்கும். பிரேசிலை போன்று வாகனங்களை மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயக்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு 4.65 பில்லியன் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நமக்கு 16.5 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவை. எனவே எவ்வளவு எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும். 
பெட்ரோலை விட எத்தனால் சிறப்பானது மற்றும் விலை குறைவானது. நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் இயங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com